Enable Javscript for better performance
டிரக்கில் கொள்ளையடிக்கப்பட்ட ஜவுளிகள் மீட்பு: நால்வர் கைது- Dinamani

சுடச்சுட

    

    டிரக்கில் கொள்ளையடிக்கப்பட்ட ஜவுளிகள் மீட்பு: நால்வர் கைது

    By DIN  |   Published on : 15th October 2016 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாதில் டிரக்கில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.22 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் மீட்கப்பட்டன. இவற்றைக் கொள்ளையடித்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.
    இது குறித்து காஜியாபாத் நகர காவல் துறைக் கண்காணிப்பாளர் சல்மான் தாஸ் பாட்டீல்   வெள்ளிக்கிழமை கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி ராஜ்நகர் எக்ஸ்டென்ஸன் பகுதியில் டிரக்கில் கொண்டு செல்லப்பட்ட ஜவுளிகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.
    இந்நிலையில், போலீஸுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. சம்பவத்தன்று தில்லி - மீரட் தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரை போலீஸார் வழிமறுத்து நிறுத்தி விசாரித்தனர்.
    அக்காரில் இருந்த நால்வரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் ஷாநவாஸ், அக்பர், ராஜ்குமார், மன்வீர் என்று அடையாளம் காணப்பட்டது. அவர்கள்  டிரக்கில் ஜவுளிகளைக் கொள்ளையடித்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது.
    இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 4 நாட்டு கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் அளித்த தகவலின் பேரில், கொள்ளையடிக்கப்பட்ட ஜவுளிகள் மீட்கப்பட்டன. காரின் ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டார் என்றார் சல்மான் தாஸ் பாட்டீல்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai