Enable Javscript for better performance
தில்லியில் ரூ.18 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட இளைஞர் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் ரூ.18 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட இளைஞர் மீட்பு

    By DIN  |   Published on : 15th October 2016 04:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் ரூ.18 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட இளைஞர் உத்தர பிரதேச மாநிலத்தில் மீட்கப்பட்டார்.
    இது குறித்து காவல் துறை உயரதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லியில் மனித வள முகவராக வேலை பார்ப்பவர் ஃபெரோஸ்கான் (21). இவரது சகோதரரும் மேலும் சில முகவர்களும் சேர்ந்து துபைக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் தொழில் செய்து வருகின்றனர். இதற்காக அலுவலகமும் அமைத்துள்ளனர். இவர்களுக்கு இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது.
    இந்நிலையில், சம்பவத்தன்று ஃபெரோஸ்கானின் சகோதரர் அலுவலகத்துக்கு 5 பேர் கொண்ட கும்பல் வந்தது. அப்போது அங்கிருந்த ஃபெரோஸ்கானை தாக்கி உத்தர பிரதேச மாநிலம், புலந்தஷாஹருக்கு கடத்திச் சென்றது. பின்னர் ரூ.18 லட்சம் கொடுத்தால்தான் ஃபெரோஸ்கானை விடுவிப்பதாகவும், இல்லையென்றால் கொன்றுவிடுவதாகவும் அக்கும்பலினர் மிரட்டியுள்ளனர்.
    இதற்கிடையே, போலீஸாரின் வலையில் இருந்து தப்பிக்கும் நோக்கில், கடத்தலில் ஈடுபட்ட சாஜித், ஹிலால், சல்மான், அஷ்லாம், ரிஸ்வான் ஆகிய அந்த ஐந்து பேரும் அடிக்கடி தங்களது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு வந்துள்ளனர்.
    இந்நிலையில், சப்தால்பூர் கிராமத்தில் உள்ள ரிஸ்வானின் வீட்டில் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஃபெரோஸ்கான் மீட்கப்பட்டார். அப்போது சல்மான் கைது செய்யப்பட்டார். மற்ற  நால்வரையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai