Enable Javscript for better performance
ரூ.37 லட்சத்துடன் தலைமறைவான சொத்து வணிகர் உ.பி.யில் கைது- Dinamani

சுடச்சுட

    

    ரூ.37 லட்சத்துடன் தலைமறைவான சொத்து வணிகர் உ.பி.யில் கைது

    By DIN  |   Published on : 15th October 2016 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சொத்து வாங்க விரும்பிய பெண்ணின் ரூ.37 லட்சம் பணத்துடன் தலைமறைவான சொத்து வணிகரை தில்லி காவல் துறையினர் கோரக்பூரில் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.30 லட்சம் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தெற்கு மாவட்டக் காவல் சரக துணை ஆணையர்  ஈஸ்வர் சிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லி சஃப்தர்ஜங் என்கிளேவ் பகுதியைச் சேர்ந்தவர் குசும். இவர் உத்தம் நகரைச் சேர்ந்த பானு பிரதாப் மீது தில்லி வி.கே. நார்த் காவல் நிலையத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி புகார் அளித்திருந்தார். அதில், "வசந்த் குஞ்ச் பகுதியில்  சொத்து வாங்கும் நோக்கில் சொத்து வணிகராக செயல்படும் பானு பிராதப்பை அணுகினேன். சாகேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இதற்கான ஆலோசனை நடத்தினேன். பிறகு சொத்து வாங்குவதற்காக ரூ.37 லட்சம் பணத்தை எனது பணியாள் தேஷ்ராஜிடம் கொடுத்து பானு பிரதாப்பிடம் அனுப்பிவைத்தேன். அப்போது, தேஷ்ராஜை ஏமாற்றிவிட்டு ரூ.37 லட்சம் பணத்துடன் அவர் தலைமறைமாகிவிட்டார்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
    இதையடுத்து, பானு பிராதப்பை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இப்படையினர் பல இடங்களிலும் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூரில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போலீஸார் அங்கு விரைந்து சென்று பானு பிரதாப்பை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.30 லட்சம் மீட்கப்பட்டது. எஞ்சிய பணம் ரூ.7 லட்சத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய அவரது கூட்டாளிகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக ஈஸ்வர் சிங் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai