Enable Javscript for better performance
லஞ்ச வழக்கு: பெண் நீதிபதி கணவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    லஞ்ச வழக்கு: பெண் நீதிபதி கணவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் நீதிபதியின் கணவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் 17-ஆம் தேதிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
    ரச்சனா திவாரி லக்கன்பால் என்ற பெண் நீதிபதி ரூ.4 லட்சம் லஞ்சம் பெறும்போது சிபிஐயால் கையும் களவுமாக பிடிபட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அவரும், அவரது கணவர் அலோக் லக்கன்பால், தரகராகச் செயல்பட்டதாக வழக்குரைஞர் விஷால் மேஹன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். பெண் நீதிபதி மற்றும் அவரது கணவர் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது குழந்தைகளின் நிலையை கருத்தில் கொண்டு பெண் நீதிபதி ரச்சனாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
    இந்நிலையில், அவரது கணவர் அலோக் லக்கன்பால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, சிறப்பு சிபிஐ நீதிபதி சஞ்சீவ் அகர்வால் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அலோக் லக்கன்பாலுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டால் வழக்கு விசாரணையை அவர் சீர்குலைக்க வாய்ப்பாக அமைந்துவிடும் என்று சிபிஐ தரப்பில் வாதாடப்பட்டது. பின்னர், இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, அலோக் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் 17-ஆம் தேதி அறிவிப்பதாக ஒத்தி வைத்தார். இதனிடையே, ரச்சனா, அலோக் ஆகியோருடன் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் விஷாலின் ஜாமீன் மனுவும் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது. அலோக் லக்கன்பால், விஷால் மேஹன் ஆகிய இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai