Enable Javscript for better performance
பெண் மீது துப்பாக்கிச் சூடு- Dinamani

சுடச்சுட

    

    தென்மேற்கு தில்லி, நஜஃப்கர்க் பகுதியில் அடையாளம் தெரியாதவர் துப்பாக்கியால் சுட்டதில் பெண் ஒருவர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
     இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது:
    தில்லியில் உள்ள டிராவல் ஏஜென்சியில் வேலைபார்த்து வருபவர் ரீனா (32). அவர் திங்கள்கிழமை காலை 7.30 மணியளவில்  நஜஃப்கர்க் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
    அப்போது, அவரை நோக்கி அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அப்பெண்ணுக்கு தோள்பட்டையில் பலத்த காயமேற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    அவரது உடல்நிலை சீராக உள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது துப்பாக்கியால் சுட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் விரைவில் பிடிபடுவார் என்றார் அந்த அதிகாரி.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai