இந்தியாவில் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் தில்லி பல்கலைக்கழகம் 8-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
குவாக்கரேலி சைமன்ட்ஸ் என்ற பிரிட்டன் நிறுவனம் நடத்திய இந்த கணக்கெடுப்பின் படி, 481-491 புள்ளிகளுடன் தில்லி பல்கலைக்கழகம் 8-ஆவது இடத்தில் உள்ளது. அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, தில்லி ஐஐடி முதலிடத்தில் உள்ளது.
ஆய்வு, பயிற்றுவித்தல், வேலைவாய்ப்பு, சர்வதேச தரம், கல்வியின் தரம், பேராசிரியர்-மாணவர் விகிதம், சர்வதேச பேராசிரியர் விகிதம், சர்வதேச மாணவர்கள் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வில் பல்கலைக்கழகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
நாட்டின் தனியார் பல்கலைக்கழகங்களிலேயே சிறந்ததாக, மணிபால் பல்கலைக்கழகம் தேர்வாகியுள்ளது. அந்தப் பல்கலைக்கழகம் மொத்தம் 701-750 புள்ளிகளுடன் 13-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.