பெருமாள் முருகன் எழுதிய "மாதொரு பாகன்' நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருதை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு, மனு நீதி பவுண்டேஷன் என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அமைப்பின் தலைவர் மாணிக்கம் ஏ கவுண்டர், மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மாவிடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம் வருமாறு:
சர்வதேச சந்தையில் ஹிந்து கலாசாரத்தை இழிவுப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள "மாதொரு பாகன்' நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது, அனிருதன் வாசுதேவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "மாதொரு பாகன்' நூலை எழுதிய பெருமாள் முருகன் பெறும், ஃபோர்டு பவுண்டேஷன் நிதியுதவி குறித்து விசாரிக்க வேண்டும்.
ஆதாரமற்று எழுதப்பட்ட நூல் தொடர்பான விவகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), "கல்வி நெறிகள் குழு' ஆகியவற்றின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். மேலும், இந்த நூலையும் தடை செய்ய வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.