Enable Javscript for better performance
மின் கம்பத்தில் கார் மோதி சிங்கப்பூர் தூதரக ஊழியர் பலி- Dinamani

சுடச்சுட

    

    மின் கம்பத்தில் கார் மோதி சிங்கப்பூர் தூதரக ஊழியர் பலி

    By DIN  |   Published on : 06th February 2017 06:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் சிங்கப்பூர் தூதரக ஊழியர் பலியானார். அவரது மனைவி படுகாயமடைந்தார்.
    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    தில்லியிலுள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் பணியாற்றி வந்தவர் பேட்ரிக் (24). இவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியர் மோதி நகரில் வசித்து வந்தனர்.
    இந்நிலையில், பேட்ரிக்கும், அவரது மனைவியும் சிங்கப்பூர் தூதரகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர், அங்கிருந்து மோதி நகருக்கு நள்ளிரவு 1 மணியளவில் இருவரும் காரில் புறப்பட்டனர். காரை பேட்ரிக் ஓட்டினார். செக் குடியரசு நாட்டின் தூதரகம் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், அங்குள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    இதில் படுகாயமடைந்த இருவரும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில், பேட்ரிக் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேட்ரிக் மது போதையில் இருந்தாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே தெரியவரும் என்றார் அந்த அதிகாரி.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai