Enable Javscript for better performance
புளூ லைன் மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    புளூ லைன் மெட்ரோ ரயில் சேவையில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட மின் தொழில்நுட்ப கோளாரால் ரயில் சேவை சுமார் 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.
    பாய் தூஜ் பண்டிகை தினமான சனிக்கிழமை காலையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய அதிக பயணிகள் கூடியதால், கூட்டம் நெரிசல் ஏற்பட்டது.
    இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    புளூ லைன் மெட்ரோ ரயில் வழித்தடத்தில், ஆஷ்ரம் ரயில் நிலையத்தில் இருந்து ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி சனிக்கிழமை காலை 9.20 மணியளவில் சென்ற ரயிலின் மேல்புறத்தில் உள்ள மின் விநியோகம் செய்யும் கம்பி திடீரென ரயிலின் மேல்புற இயந்திரத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. சனிக்கிழமை காலை 9.20 மணி முதல் 10.05 மணி வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
    யமுனா பாங்க் - நொய்டா / வைஷாலி, கரோல் பாக் - துவாரகா செக்டார் -21 இடையே மட்டும் சிறிது நேரம் ரயில் சேவை இயக்கப்பட்டது. கரோல் பாக் - யமுனா பாங்க் இடையே ஒரு வழிபாதையில் ரயில் சேவை இயக்கப்பட்டது.
    இதையடுத்து, தொழில்நுட்பக் கோளாறில் சிக்கிய ரயிலை பொறியாளர்கள் வழித்தடத்தில் இருந்து அப்புறப்படுத்திய பின்பு காலை 10.05 மணி முதல் ரயில் சேவை வழக்கமாக இயக்கப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai