Enable Javscript for better performance
"முன்மாதிரி உயிரியல் பூங்கா'வாக மாறுகிறது தில்லி உயிரியல் பூங்கா!- Dinamani

சுடச்சுட

    

    "முன்மாதிரி உயிரியல் பூங்கா'வாக மாறுகிறது தில்லி உயிரியல் பூங்கா!

    By DIN  |   Published on : 22nd October 2017 11:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி உயிரியல் பூங்காவை, நாட்டிலுள்ள மற்ற உயிரியல் பூங்காக்களுக்கு முன்மாதிரியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக தில்லி உயிரியல் பூங்காவின் இயக்குநர் ரேணு சிங் கூறியதாவது:
    தில்லி உயிரியல் பூங்காவை, நாட்டிலுள்ள மற்ற உயிரியல் பூங்காக்களுக்கு முன்மாதிரியாக மாற்றும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, பூங்காவின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. விலங்குகளுக்கு அறுவை சிகிச்சையின்போது, மயக்க மருந்து அளிப்பதற்கான நவீன கருவியை அண்மையில் கொள்முதல் செய்தோம். அக்கருவியை பயன்படுத்துவது குறித்தும், விலங்குகளுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிப்பது குறித்தும் அமெரிக்க கால்நடை மருத்துவக்  குழுவின் மூலம் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தையும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறோம். நெருப்புக் கோழி, கங்காரு உள்பட பார்வையாளர்களைக் கவரக் கூடிய ஒரு சில விலங்கினங்கள், நமது பூங்காவில் இல்லை. விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின்கீழ், பிற பூங்காக்களில் இருந்து மேற்கண்ட விலங்குகளைப் பெறுவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், விலங்குகள் மற்றும் பார்வையாளர்கள் இடையிலான இணைப்பை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
    தலைநகரில் உள்ள முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக, தில்லி உயிரியல் பூங்கா திகழ்ந்து வருகிறது. சுமார் 176 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இப்பூங்காவில் 130 இனங்களைச் சேர்ந்த சுமார் 1350 விலங்குகள் உள்ளன. இதுதவிர ஏராளமான பறவையினங்களும் உள்ளன.
    எனினும், பார்வையாளர்களை வெகுவாகக் கவரக் கூடிய ஒரு சில விலங்கினங்கள், இப்பூங்காவில் இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. மேலும், பறவைக் காய்ச்சல் காரணமாக தில்லி உயிரியல் பூங்காவில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து ஏராளமான பறவைகள் உயிரிழந்தன. இதன் காரணமாக ஏற்பட்ட அவப் பெயரை சரி செய்யும் நோக்கில், பூங்கா நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai