Enable Javscript for better performance
எல்எல்ஏக்களுக்கு எதிராக சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    எல்எல்ஏக்களுக்கு எதிராக சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 09th February 2018 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களுக்கு எதிராக பாஜகவின் நெருக்கடியால் காவல் துறை சதி செய்து வருகிறது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
    இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
    கூட்டு பாலியல் வழக்கில் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர் ராக்கி பிர்லாவின் தந்தை அண்மையில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற பொய்யான வழக்குகளை தில்லி காவல்துறை பதிவு செய்ய பாஜக நெருக்கடி அளித்து வருகிறது. இதுபோல, கட்சியின் 15 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராகவும் பொய்யான வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகள் பொய்யானது என அடுத்தடுத்து நீதிமன்றத்தில் நிரூபணமாகி வருகின்றன.
    தில்லியில் நடைபெறும் திருட்டு, பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை தொடர்பான புகார்களை காவல்துறை பதிவு செய்வதில்லை. ஆனால், ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டால் உடனே காவல்துறை வழக்குப் பதிவு செய்கிறது. ஆம் ஆத்மி கட்சிக்கும், கட்சியின் தலைவர்களுக்கும் அவப்பெயர் உருவாக்கும் வகையில் காவல்துறை செயல்பட்டு வருகிறது.
    கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம் என்றார் சஞ்சய் சிங். பேட்டியின் போது, சட்டப்பேரவை துணைத் தலைவர் ராக்கி பிர்லா உடனிருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai