Enable Javscript for better performance
காரில் மதுபானம் கடத்தியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஹரியாணாவில் இருந்து சட்டவிரோதமாக மதுபாட்டில்களைக் காரில் கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 576 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து தென்கிழக்கு மாவட்டக் காவல் துறை துணை ஆணையர் சின்மய் பிஸ்வால் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென் கிழக்கு மாவட்ட ஜாமியா நகர் போலீஸாருக்கு சம்பவத்தன்று ரகசியத் தகவல் வந்தது. அதில், ஹரியாணா மாநிலம், சோனிபட்டில் இருந்து மாருதி காரில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் மதுராவுக்கு கடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
    இதையடுத்து, காலிந்தி குஞ்ச் பகுதியில் சாலையில் தடுப்புகள் அமைத்து அவ்வழியாக வரும் வாகனங்களைக் கண்காணித்தனர்.
    அப்போது, சரிதா விஹார் பகுதியில் இருந்து வேகமாக வந்த மாருதி காரை மடக்கி நிறுத்தி போலீஸார் சோதனையிட்டனர். விசாரணையில் அதன் ஓட்டுநர் சோனிப்பட் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (20) என்பது தெரிய வந்தது. மேலும், காருக்குள் 576 சட்டவிரோத மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மதுபானங்கள் ஹரியாணா பகுதியில் மட்டும் விற்பதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மதுபான பாட்டில்களும், காரும் பறிமுதல் செய்யப்பட்டன. காரை ஓட்டிவந்த நவீன் குமார் கைது செய்யப்பட்டதாக காவல் அதிகாரி சின்மய் பிஸ்வால் கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai