Enable Javscript for better performance
குருகிராம் சிறையில் கைதிகளிடையே மோதல்: தடுக்கச் சென்ற வார்டன்கள் மூவர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    குருகிராம் சிறையில் கைதிகளிடையே மோதல்: தடுக்கச் சென்ற வார்டன்கள் மூவர் காயம்

    By DIN  |   Published on : 09th February 2018 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசியத் தலைநகர் வலயம், குருகிராம் சிறைச்சாலையில் கைதிகளிடையே புதன்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் 3 கைதிகள், மோதலைத் தடுக்கச் சென்ற 3 வார்டன்கள் காயமடைந்தனர்.
    இது குறித்து சிறைத் துறை அதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது: இச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் இரு கோஷ்டிகள் புதன்கிழமை காலை 8 மணியளவில் மோதிக் கொண்டன. சிறைச்சாலையில் பேஸ்-1 பகுதியில் உள்ள கேன்டீனுக்கு வெளியே அசோக் பவானா, ராஜேஸ் குஜ்ஜார் ஆகியோர் தலைமையிலான கோஷ்டிகளிடையே இம்மோதல் உருவானது. இதையடுத்து, மற்ற கைதிகளும் அவர்களுடன் சேர்ந்து கொண்டதால், மோதல் பெரிதானது. அப்போது, சுமார் 30-க்கும் மேற்பட்ட கைதிகள் பரஸ்பரம் மரக் கிளைகள் உள்ளிட்டவற்றால் தாக்கினர். மோதலைத் தடுக்கச் சென்ற வார்டன்கள் சுரேந்தர், சோம்நாத், ஜெய் பகவான் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரோஹித், ராஜேஸ் உள்ளிட்ட 3 கைதிகள் காயமடைந்தனர். இந்த கோஷ்டிகளிடையே நடைபெறும் இரண்டாவது மோதலாகும் என்றார் அந்த அதிகாரி.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai