Enable Javscript for better performance
கேஜரிவால் மீது ஜேட்லி தொடுத்த அவதூறு வழக்கு: ஏப்ரல் 7-இல் சாட்சியம் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    கேஜரிவால் மீது ஜேட்லி தொடுத்த அவதூறு வழக்கு: ஏப்ரல் 7-இல் சாட்சியம் பதிவு

    By DIN  |   Published on : 09th February 2018 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொடுத்த அவதூறு வழக்கில் ஏப்ரல் 7-ம் தேதி சாட்சியம் பதிவு செய்யப்படும் என்று தில்லி பெருநகர நீதிமன்றம் அறிவித்துள்ளது.
    தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் (டிடிசிஏ) நிதி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டிய ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் உள்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குமார் விஸ்வாஸ், சஞ்சய் சிங், ராகவ் சத்தா, ஆசுதோஷ், தீபக் பாஜ்பாய் ஆகியோர் மீது மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி அவதூறு வழக்கு தொடுத்திருந்தார்.
    இந்த வழக்கில் அருண் ஜேட்லி, கேஜரிவால் உள்பட அனைவரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தில்லி பெருநகர தலைமை நீதிபதி தீபக் ஷராவத் உத்தரவிட்டிருந்தார்.
    இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால் வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அருண் ஜேட்லி தரப்பில் கோரப்பட்டது. இதேபோல், அரவிந்த் கேஜரிவால், விஸ்வாஸ், சஞ்சய் சிங் ஆகியோருக்கும் நேரில் ஆஜராவதில் இருந்து வியாழக்கிழமை விலக்கு கோரப்பட்டது. அனைவருக்கும் வியாழக்கிழமை ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்த நீதிபதி, இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
    இதே விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, முதல்வர் கேஜரிவால் உள்ளிட்டோர் மீது சிவில் அவதூறு வழக்கு ஒன்று தில்லி உயர் நீதிமன்றத்தில் தனியாக தொடுத்துள்ளார். அதில், ரூ. 10 கோடி மான நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai