Enable Javscript for better performance
ஜிம்கானா கிளப்பின் ஒரு பகுதிக்கு 'சீல்'- Dinamani

சுடச்சுட

    

    சட்ட விரோதமாக கட்டுமானங்கள் செய்திருந்ததாக கூறி, தில்லியின் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் லுட்டியன்ஸ் பகுதியில் உள்ள ஜிம்கானா கிளப்பின் ஒரு பகுதிக்கு புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) சீல் வைத்தது.
    இதுதொடர்பாக என்டிஎம்சி அதிகாரி கூறுகையில், 'ஜிம்கானா கிளப்பில் உள்ள பகுதி என்டிஎம்சி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது' என்று தெரிவித்தார்.
    இந்த விவகாரம் குறித்து ஜிம்கானா கிளப் செயலரைத் தொடர்பு கொண்ட போது அவர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
    சட்டவிரோதமான கட்டுமானங்கள் மீது என்டிஎம்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், தீயணைப்புத் துறை அனுமதியின்றி செயல்படும் உணவு விடுதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai