Enable Javscript for better performance
தில்லி சட்டப்பேரவை நிகழ்வுக்கு எதிரான மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது என தில்லி பேரவையில் நடத்தப்பட்ட செயல்விளக்கத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறி ஆம் ஆத்மி எம்எல்ஏ சௌரப் பரத்வாஜ் கடந்த ஆண்டு மே 9-ம் தேதி தில்லி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.
    இந்த விவகாரம் குறித்து தில்லி சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 'உச்ச நீதிமன்றத்தில் வாக்குப்பதிவு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த விவகாரத்தை தில்லி சட்டப்பேரவையில் வைத்து விவாதித்தது சட்டவிரோதம்' என்று அபிஷேக் ஆனந்த் ராய் என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மித்தல், நீதிபதி சி. ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், 'தில்லி சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பாக நீதிமன்றங்கள் கேள்வி கேட்கலாம் என்று முன்பு தீர்ப்புகள் ஏதாவது வந்துள்ளதா?' என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மனுதாரரின் வழக்குரைஞர் பதிலளிக்கவில்லை.
    இதையடுத்து, நீதிபதிகள், 'இந்த விவகாரம் முழுவதும் சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்துக்கு உள்பட்டதாகும். இதில் நீதிமன்றங்கள் தலையிடாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று உத்தரவிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai