Enable Javscript for better performance
மோட்டார்சைக்கிளில் சென்ற இளைஞர் போலீஸ் தடுப்பு சங்கிலியில் சிக்கி சாவு- Dinamani

சுடச்சுட

    

    மோட்டார்சைக்கிளில் சென்ற இளைஞர் போலீஸ் தடுப்பு சங்கிலியில் சிக்கி சாவு

    By DIN  |   Published on : 09th February 2018 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போலீஸார் அமைத்திருந்த தடுப்புகள் இடையில் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
    இது குறித்து தில்லி காவல் துறையினர் வியாழக்கிழமை கூறியதாவது: வடமேற்கு தில்லி, சுபாஷ் பிளேஸ் பகுதியில் போலீஸார் சாலையில் தடுப்புகள் அமைத்திருந்தனர்.
    இந்த தடுப்புகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு இப்பகுதியில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த அபிஷேக் மோட்டார்சைக்கிளில் வந்தார்.
    அப்போது, அவரது கழுத்து வாகனத் தடுப்புகளில் பிணைக்கப்பட்டிருந்த சிங்கிலியில் சிக்கி காயமடைந்து உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.
    இச்சம்பவத்தில் கவனக் குறைவுடன் செயல்பட்டதாக உள்ளூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆயுதப் படைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
    காவல் உதவி ஆய்வாளர் மற்றும் நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகுதான் அபிஷேக் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீஸார் கூறினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai