Enable Javscript for better performance
வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆம் ஆத்மி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆம் ஆத்மி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 09th February 2018 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த 3 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.
    இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் தலைவருமான யோகானந்த் சாஸ்திரி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
    லோக்பால் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சியில் அமர்ந்து 3 ஆண்டுகள் கடந்த பிறகும் தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் கேஜரிவால் மறந்துவிட்டார். தில்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக்பால் மசோதாவுக்கும், ஆட்சிக்கு வருவதற்கு முன் தெரிவித்த லோக்பால் மசோதாவுக்கும் முரண்பாடுகள் உள்ளன. நாட்டில் எந்தவொரு கட்சித் தலைவரும் அரவிந்த் கேஜரிவாலை போல அராஜகவாதியாக நடந்து கொள்வதில்லை. அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு உதாரணமாக ஆம் ஆத்மி கட்சியில் முக்கியத் தலைவர்களாக இருந்த யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண், சாந்தி பூஷண் ஆகியோரை கேஜரிவால் வெளியேற்றி விட்டார். உள்கட்சி ஜனநாயகம் குறித்த புகார் தெரிவித்ததற்காக கட்சியின் லோக்பால் குழுவில் இருந்த அட்மிரல் ராம்தாஸையும் வெளியேற்றினார்.
    ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி அரசில் பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் புகார்கள் உள்ளன. கேஜரிவாலுக்கு நெருக்கமான சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிராக ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டும் இதுவரை அவர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. ஆலங்கட்டி மழை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் விவசாயிகள் அனைவருக்கும் காங்கிரஸ் ஆட்சியில் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மி ஆட்சியில் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படுகிறது என்றார் யோகானந்த சாஸ்திரி. பேட்டியின் போது, கட்சியின் மூத்த தலைவர் சத்தார் சிங், இந்திய புரஃபஸனல் காங்கிரஸ் அமைப்பின் தில்லி பிரிவுத் தலைவர் அமன் பன்வர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai