Enable Javscript for better performance
அமெரிக்க ஜீன்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க இருவருக்கு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்க ஜீன்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க இருவருக்கு உத்தரவு

    By DIN  |   Published on : 01st January 2018 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அமெரிக்காவைச் சேர்ந்த ஜீன்ஸ் ஆடை  தயாரிப்பு நிறுவனமான லீவை ஸ்ட்ராஸின் வணிக முத்திரையைத் தவறாகப்  பயன்படுத்திய வழக்கில் அந்நிறுவனத்திற்கு இழப்பீடாக ரூ. 1 லட்சத்தை வழங்குமாறு தில்லியைச் சேர்ந்த 2 பேருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
    இது குறித்த வழக்கு விவரம் வருமாறு: தில்லியைச் சேர்ந்த சஞ்சய் குமார்,  தினேஷ் மெஹதோ ஆகியோர் தில்லியிலும்,  பிகாரிலும் ஆயத்த ஆடைகளைத் தயாரித்து, விற்பனை செய்யும் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
    இந்நிலையில்,  அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் செயல்படும் லீவைஸ் ஸ்ட்ராஸ் நிறுவனம்,  தில்லி நீதிமன்றத்தில் சஞ்சய் குமார்,  தினேஷ் மெஹதோ ஆகியோருக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடுத்தது. 
    அதில், தங்களது நிறுவனத்தின் பெயர், இலச்சினை,  வணிக முத்திரை ஆகியவற்றை சஞ்சய் குமாரும்,  தினேஷும் தாங்கள் தயாரிக்கும் ஆடைகள்,  ஜீன்ஸ், விளையாட்டு ஆடைகள்,  காலணிகள் ஆகியவற்றில் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்திருந்தது.
    இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அனில் அன்டில் பிறப்பித்த உத்தரவு:
    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் லீவைஸ் ஸ்ட்ராஸ் நிறுவனத்தின் வணிக முத்திரை,  அடையாளத்தை தங்களது தயாரிப்புகளை விற்க பயன்படுத்தியிருப்பது உரிய ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது.  இதனால், இருவரும் சம்பந்தப்பட்ட  லீவைஸ் ஸ்ட்ராஸ் நிறுவனத்திற்கு இழப்பீடாக தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai