Enable Javscript for better performance
ஒரே குடும்பத்தில் 3 பேர் மர்மச் சாவு போலீஸார் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    ஒரே குடும்பத்தில் 3 பேர் மர்மச் சாவு போலீஸார் விசாரணை

    By DIN  |   Published on : 01st January 2018 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென் மேற்கு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 8 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தனர். மனைவி,  மகனைக் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இது குறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது:
    தென் மேற்கு தில்லி சாவ்லா பகுதியைச் சேர்ந்தவர் அஜய் (38). சொத்துகளை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சு (35). இத்தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன், 12 வயது வயதில் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள். அஜயின் மூத்த 
    சகோதரர் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது குடும்பத்தையும் அஜய் பராமரித்து வந்தார்.  அஜய் வீட்டின் அருகே அவரது சகோதரர் குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். 
    இந்நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை காலை சகோதரரின் மகன்கள் அஜயின் வீட்டுக்கு வந்தனர். அப்போது,  அஜய் வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் கிடப்பதைப் பார்த்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
    இதையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  வீட்டில் அறையில் மஞ்சு,  அவரது மகன் மாகன் ஆகியோரும், மற்றொரு அறையில் அவரது மகளும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.
    இதையடுத்து, நால்வரும் இருவேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.  ஆனால், ஏற்கெனவே அஜய், மஞ்சு, மாகன் ஆகியோர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அஜயின் மகள் சிகிச்சையில் உள்ளார்.
    சம்பவம் நிகழ்ந்த வீட்டிலிருந்து அஜய் தனது தாய், சகோதரிக்கு எழுதிய கடிதத்தை போலீஸார் மீட்டனர்.  அதில் நிதிச் சுமையால் மனவிரக்தியில் அஜய் இருந்ததாக எழுதப்பட்டிருந்தது.  மேலும், இறந்த மஞ்சு, மாகன்,  மகள் ஆகியோரது கழுத்துகளில் காயக் கீறல்கள் இருந்தன. இதனால்,  மனைவி, மகனைக் கொன்றுவிட்டு அஜய் தற்கொலை செய்திருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
    இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.  இதுகுறித்து துவாரகா பகுதி  காவல் துணை ஆணையர் சிபேஷ் சிங் கூறுகையில், "இறந்த மூவரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மகள் சிகிச்சையில் இருந்து வருகிறார் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai