Enable Javscript for better performance
தலைநகரில் கடும் பனிமூட்டம்: ரயில்-விமான போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தலைநகரில் கடும் பனிமூட்டம்: ரயில்-விமான போக்குவரத்து பாதிப்பு

    By DIN  |   Published on : 01st January 2018 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகரில்  ஞாயிற்றுக்கிழமை  காலை ஏற்பட்ட கடும் பனிமூட்டம் காரணமாக தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து  பல்வேறு இடங்களுக்கு புறப்பட்டுச் செல்லவிருந்த  15 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.  தில்லி விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாட்டிலும் 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. 
    தில்லியில்  இரு வாரங்களாக அடர் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக காலை வேளைகளில் சாலைகளில் காண்பு திறன் வெகுவாக குறைவதால் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கி செல்லும் நிலை உள்ளது.
    இந்நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை காலையில் அடர் பனிமூட்டம் காணப்பட்டது.  குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.  காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதம் 97 சதவீதமாகவும்,  காண்புதிறன் 400 மீட்டர்களாகவும் பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.  கடும் பனி மூட்டம் காரணமாக தில்லியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு புறப்பட்டுச் செல்லவிருந்த 15 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 
    இதுகுறித்து வடக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில்,  'அடர் பனிமூட்டத்தால் ஏற்பட்ட மோசமான காண்புதிறன் காரணமாக 57 ரயில்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டது. 15 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. 18 ரயில்களின் நேரஅட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது என்றார்.
    விமான சேவை பாதிப்பு: அடர் பனிமூட்டம் காரணமாக தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் காண்புதிறன் 75 மீட்டர்களாக குறையத் தொடங்கி,  பின்னர் 50 மீட்டர்கள் வரையிலும்  வெகுவாக குறைந்தது.  இதனால்,  காலை 7.30 மணியில் இருந்து விமானங்கள் இயக்குவதில் சுமார் 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. 
    இது குறித்து விமான நிலைய அதிகாரி கூறுகையில், "தில்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்த சுமார் 40 விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.  பின்னர், காலை 11 மணிக்கு விமான இயக்கத்தில் நிலைமை சீரடைந்தது' என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai