Enable Javscript for better performance
திருமண ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு: சிறுமி படுகாயம்- Dinamani

சுடச்சுட

    

    திருமண ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு: சிறுமி படுகாயம்

    By DIN  |   Published on : 01st January 2018 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் திருமண ஊர்வலத்தில் உற்சாக மிகுதியில் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 16 வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.
    இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    மத்திய தில்லியின் சாந்தினி மகால் பகுதியில் சனிக்கிழமை திருமண ஊர்வலம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பப்லு (47) என்பவர், தன்னிடமிருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார். அப்போது, ஒரு வீட்டின் மாடியில் இருந்தபடி ஊர்வலத்தை பார்த்துக் கொண்டிருந்த முகமது நயீம் (16) என்ற சிறுமியின் மீது குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த சிறுமி, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 
    இதனிடையே, பப்லுவை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் வேண்டுமென்றே சிறுமியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai