Enable Javscript for better performance
மயூர் விஹார் ஃபேஸ் 2 கோயிலில் விநாயகர் சிலை கண்காட்சி, ஓவியப் போட்டி: ஏராளமான குழந்தைகள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    மயூர் விஹார் ஃபேஸ் 2 கோயிலில் விநாயகர் சிலை கண்காட்சி, ஓவியப் போட்டி: ஏராளமான குழந்தைகள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 01st January 2018 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புத்தாண்டை ஒட்டி கிழக்கு தில்லி  மயூர்விஹார் பேஸ் 2-இல் அமைந்துள்ள அருள்மிகு காருண்ய மகா கணபதி கோயிலில் விநாயகர் சிலைகள், படங்கள் இடம்பெற்ற கண்காட்சியும்,  விநாயகர் உருவங்களை வரையும் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
    "ஞானம், த்வம், கணபதிம்' எனும் தலைப்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில் பல்வேறு வடிவங்களில் உள்ள விநாயகரின் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 
    2017-ஆம் ஆண்டுக்கு விடைகொடுக்கவும்,  2018-ஆம் ஆண்டில் பெரியவர்கள், குழந்தைகள் அனைத்து நலன்களையும் பெறுவதற்காகவும் விநாயகரின் ஆசீர்வாதத்தை பெறும் வகையிலும் இக்கண்காட்சிக்கு ஸ்ரீகணேஜ் சேவா சமாஜம் ஏற்பாடு செய்திருந்தது. இக்கண்காட்சியை கிழக்குத் தில்லி மாநகராட்சி கவுன்சிலர் பாவ்னா மாலிக் தொடங்கிவைத்தார்.  
    இக் கண்காட்சியை ஒட்டி,  குழந்தைகள் பங்கேற்ற விநாயகர் வரையும் ஓவியப் போட்டி நடைபெற்றது.  இதில், 4-7, 8-10, 10-15 வயதுள்ள குழந்தைகள் மூன்று பிரிவாக பங்கேற்றனர்.  
    காஜிப்பூரைச் சேர்ந்த நலிந்த பிரிவு குழந்தைகள் 10 பேர் உள்பட 38 குழந்தைகள் இந்த ஓவியப் போட்டியில் பங்கேற்றனர்.  11-15 வயது பிரிவில் நலிந்தோர் பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் ராணி,  மாஸ்டர் மகேந்திரா ஆகியோர் முதல் இரு பரிசுகளை வென்றனர்.  அதேபோன்று,  8-10 வயதுக்குள்பட்ட பிரிவில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிறுமி முஷைரா பர்வீன்,   முதல் பரிசு வென்றார்.
    போட்டியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை ஸ்ரீ கணேஷ் சமாஜத்தின் தலைவர் ஜெயராமன் வழங்கினார்.  பங்கேற்புச் சான்றிதழ்களை புரவலர் எஸ்.ராமன் வழங்கினார்.  சமாஜத்தின் துணைத் தலைவரும், நிகழ்ச்சியின்ஒருங்கிணைப்பாளருமான  ஆர். கிருஷ்ணன் விழாவின் முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். சமாஜத்தின் உறுப்பினர் எஸ். நடராஜன் நன்றி கூறினார்.  இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai