Enable Javscript for better performance
யமுனையில் மாசு அதிகரிப்பு: குடிநீர் விநியோகம் பாதிக்கும்?- Dinamani

சுடச்சுட

    

    யமுனையில் மாசு அதிகரிப்பு: குடிநீர் விநியோகம் பாதிக்கும்?

    By DIN  |   Published on : 01st January 2018 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    யமுனையில்  மாசு அதிகரித்துள்ளதால்  தலைநகரின் சில பகுதிகளில் திங்கள்கிழமை குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
    இது குறித்து தில்லி குடிநீர் வாரியத்தின் (டிஜேபி) உயர் அதிகாரி கூறியதாவது:
    யமுனையில் மாசு அதிகரித்துள்ளது. இதனால் வாஜீராபாத், சந்தர்வால், ஹைதர்பூர், ஓக்லா, துவாரகா, பவானா, நாங்லோயி ஆகிய பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களில் செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடும். 
    இதைத் தொடர்ந்து வடக்கு தில்லி, மத்திய தில்லி, மேற்கு தில்லி, தெற்கு தில்லி,  தில்லி கன்டோன்மென்ட்,  புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ஆகியவற்றின் சில பகுதிகளில் திங்கள்கிழமை குடிநீர் விநியோகம் பாதிக்கப்படக்கூடும் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai