Enable Javscript for better performance
வரும் மார்ச் மாதத்தில் சி.பி.எஸ்.இ. தேர்வு?- Dinamani

சுடச்சுட

    

    மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) தேர்வுகள் 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளதாக சி.பி.எஸ்.இ. வட்டாரங்கள் தெரிவித்தன.
    இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:  10, 12-ஆம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ. தேர்வுகள் 2018 மார்ச் மாதம் தொடங்கவுள்ளன. தேர்வுகளுக்கான அட்டவணை ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும். தேர்வுக்கான முன் ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன. தேர்வு நடைபெறும் சரியான தேதி மிக விரைவிலே அறிவிக்கப்படும். 
    தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட வேண்டும். பரீட்சைக்கான அட்டவணை C​B​S​E.​N​I​C.​IN,  CB​S​E​A​C​A​D​E​M​I​C.​IN  ஆகிய இணையதளங்களில் பார்வையிடலாம் என்றனர். 2017-ஆம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. தேர்வுகள் 2017, மார்ச்  9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.  இதற்கான கால அட்டவணை ஜனவரி 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai