Enable Javscript for better performance
வழிப்பறி திருடனை விரட்டிப் பிடித்த இளைஞர்! காவல்துறை பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    வழிப்பறி திருடனை விரட்டிப் பிடித்த இளைஞர்! காவல்துறை பாராட்டு

    By DIN  |   Published on : 01st January 2018 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செல்லிடப்பேசி வழிப்பறி திருடனை விரட்டிப் பிடித்த இளைஞரை பாராட்டி தில்லி காவல் துறையினர் ரூ.5 ஆயிரம் வெகுமதி அளித்தனர்.
    இச்சம்பவம் குறித்த விவரம் வருமாறு: தில்லியைச் சேர்ந்தவர் மானின் சச்தேவா (32).  இவர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கிழக்கு கைலாஷ் பகுதியிலுள்ள கேப்டர் கௌர் மார்க் பகுதியில் தனது நண்பருக்காக காத்திருந்தார். அப்போது, தனது செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார். 
    அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்,  சச்தேவாவை கீழே தள்ளிவிட்டு அவரிடமிருந்து செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு அதே வாகனத்தில் தப்பியோட முயன்றனர்.  கீழே விழுந்த நிலையில் காயமடைந்த சச்தேவா  மீண்டும் எழுந்து தனது ஸ்கூட்டர் வாகனத்திலே அந்த இருவரையும் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றார்.  தொடர்ந்து 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்ற அவர்,  கல்காஜி பேருந்து பணிமனை அருகே உள்ள ஆனந்த்மயி மார்க் பகுதியில் மடக்கினார். 
    அப்போது,  செல்லிடப்பேசியை பறித்துச் சென்றவர்களில் ஒருவர் தப்பிவிட, மற்றொருவரை சச்தேவா  சுற்றிவளைத்துப் பிடித்தார்.  பின்னர்,  அவசர தொலைபேசி எண்ணுக்கு (100) தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். 
    இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரைக் கைது செய்தனர்.  அவர் அளித்த தகவலின் பேரில் வழிப்பறியில் ஈடுபட்ட மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார். 
    சச்தேவாவின் துணிச்சலைப் பாராட்டி அமர் காலனி காவல் நிலையத்தில் சனிக்கிழமை பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தென்கிழக்கு பிராந்திய காவல் இணை ஆணையர் பிரவீர் ரஞ்சன் வணிகர் சச்தேவாவுக்கு ரூ.5ஆயிரம் வெகுமதியும், பாராட்டு அட்டையும் வழங்கினார். அப்போது தென்கிழக்கு துணை ஆணையர் சின்மயி பிஸ்வால் உடனிருந்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai