Enable Javscript for better performance
"2017-இல் டெங்கு காய்ச்சலால் 250 பேர் பலி'- Dinamani

சுடச்சுட

    

    நாடு முழுவதும் 2017-ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 250 பேர் உயிரிழந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இதே காலகட்டத்தில், 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் தெரியவந்துள்ளது.
    மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் வெளியான தகவல் விவரம்:
    கடந்த 24-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் ஒரே ஆண்டில் 250 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துவிட்டனர். 1.57 லட்சம் பேர் அந்த வகைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக தமிழகத்தில் 23,035 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 63 பேர் உயிரிழந்தனர்.
    அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் 7,442 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 41 பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துவிட்டனர். 
    சிக்குன் குனியாவால் நாடு முழுவதும் 60ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.  கடந்த 2016-ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 1.29 லட்சம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 245 பேர் உயிரிழந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai