Enable Javscript for better performance
அங்கீகாரமற்ற தில்லி காலனிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வகை செய்யும் சட்டம்: குடியரசுத் தலைவர்- Dinamani

சுடச்சுட

    

    அங்கீகாரமற்ற தில்லி காலனிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வகை செய்யும் சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

    By DIN  |   Published on : 02nd January 2018 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் அங்கீகாரமற்ற காலனிகள் மீது 2020-ஆம் ஆண்டு வரை நடவடிக்கை எடுக்காமல் இருக்க வகை செய்யும் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
    முன்னதாக, தேசிய தலை நகர் பிரந்திய தில்லி சட்டம் (சிறப்பு சலுகை) இரண்டாம் சட்டத் திருத்தம் -2017-க்கு நாடாளுமன்ற இரு சபைகளிலும் கடந்த வாரம் நிறைவேறியது.
    இந்தச் சட்டத் திருத்தம், தில்லியில் உள்ள சில அங்கீகாரமற்ற காலனிகள், குடிசைகள் மீது 2020, டிசம்பர் 31-ம் தேதி வரை நடவடிக்கை எடுக்காத வாறு இந்த புதிய சட்டம் வகை செய்கிறது.
    தேசிய தலைநகர் பிராந்திய தில்லி (சிறப்பு சலுகை) சட்டத்திருத்தம் தற்போது இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் கடந்த டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது.
    இந்நிலையில், 2002, மார்ச் 31 வரை இருந்த அங்கீகாரமற்ற காலனிகள், கிராமங்களும், அங்கு 2007, பிப்ரவரி 8-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமான நடவடிக்கைகளுக்கு மாற்று தீர்வு காணப்படும்வரை அதாவது 2020, டிசம்பர் 31-ம் தேதி வரை அந்த காலனிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதபடி, 
    புதிய சட்டத் திருத்த மசோதா கடந்த டிசம்பர் 27-ம் தேதி மக்களவையிலும், டிசம்பர் 28-ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேறியது.
    அப்போது இந்தச் சட்டம் குறித்து மக்களவையில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி புதன்கிழமை பேசுகையில், "இந்த சட்டத்தை நீட்டிக்கவில்லை என்றால், தலைநகர் தில்லியில் தேவையில்லாத பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். 
    தில்லியில் முந்தைய ஆட்சியில் இருந்த அரசு, அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் விவகாரங்களில் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதில் தோல்வி அடைந்த காரணத்தால் இந்த சட்டத்தை நீட்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
    இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் தில்லியில் உள்ள அங்கீகாரமற்ற கட்டுமானங்கள், குடிசைகள் மீது 2020, டிசம்பர் 31-ம் தேதி வரை நடவடிக்கை எடுக்க இயலாது' என்றார்.
    இந்த சட்டத் திருத்தம் தொடர்பான விவாதத்தில் பேசிய பாஜக எம்பி பர்வேஷ் வர்மா, "அங்கீகாரமற்ற காலனிகள், குடிசைப் பகுதிகள் மாற்றம் செய்ய வேண்டிய விவகாரத்தில் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கொள்கை வகுக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளது' என்று குற்றம்சாட்டியிருந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai