Enable Javscript for better performance
"இளைஞர்களுக்கு மோடி விடுத்துள்ள அழைப்பு அரசியலைத் தூய்மைப்படுத்தும்'- Dinamani

சுடச்சுட

    

    "இளைஞர்களுக்கு மோடி விடுத்துள்ள அழைப்பு அரசியலைத் தூய்மைப்படுத்தும்'

    By DIN  |   Published on : 02nd January 2018 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இளைஞர் நாடாளுமன்றம் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்துள்ள அழைப்பு இளைஞர்களை அரசியலில் நாட்டம் கொள்ள வைப்பதுடன் அரசியலைத் தூய்மைப்படுத்தவும் உதவும் என்று பாஜகவின் அமைப்பு பொதுச் செயலர் ராம்லால் தெரிவித்தார். 
    ஞாயிற்றுக்கிழமை மன்-கி-பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தில்லியில் இளைஞர் நாடாளுமன்றம் நடத்தப்படவேண்டும் என்றும் அதில் இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் இளைஞர் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கூறி இருந்தார்.  
    பிரதமர் மோடியின் இந்த ஆலோசனைக்கு தில்லி பிரதேச பாஜக அலுவலகத்தில் கூடிய நூற்றுக் கணக்கான இளைஞர்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வில் பாஜகவின் மூத்த தலைவர் ராம்லால் பேசியதாவது: 
    இளைஞர்கள் ஊழலுக்கு எதிரானவர்கள். இளைஞர்களை அரசியலில் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி விடுத்துள்ள அழைப்பானது, ஊழலே இல்லாமல் செய்து அரசியலைத் தூய்மைப்படுத்தும். இதனால், ஊழலுக்கும் குடும்ப ஆதிக்கத்துக்கும் முடிவு கட்டலாம் என்றார் அவர். 
    இந்த நிகழ்வில் பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி, பாஜக அமைப்புச் செயலாளர் சித்தார்தன், பொதுச் செயலர் ராஜேஷ் பாட்டியா, துணைத் தலைவர் ராஜீவ் பாபர், பொருளாளர் விஷ்ணு மிட்டல் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai