Enable Javscript for better performance
"ஏடிஎம்' மையங்களில் நூதனமுறையில் திருட்டு: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    "ஏடிஎம்' மையங்களில் நூதன முறையில் திருட்டு: 2 பேர் கைது

    By DIN  |   Published on : 02nd January 2018 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசியத் தலைநகர் வலயம்,  குருகிராமில் ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பொதுமக்களின் பணத்தைத் திருடிய சம்பவங்கள் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து ரொக்கம்,  கார்,  ஏடிஎம் அட்டைகள்  பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து குருகிராம் காவல் துறையினர் கூறியதாவது: குருகிராமைச் சேர்ந்த ஒருவர் ஃபாஸில்பூர் பகுதியில் உள்ள தானியங்கிப் பணம் பட்டுவாடா செய்யும் (ஏடிஎம்) மையத்திற்கு டிசம்பர் 18-ஆம் தேதி சென்றார். அங்குள்ள பணம் வழங்கும் இயந்திரத்தில் தனது ஏடிஎம் அட்டையை சொருகி, ரகசிய எண்ணையும் பதிவிட்டார். ஆனால், அவர் பதிவில் குறிப்பிட்ட பணம் இயந்திரத்தில் இருந்து வெளியே வரவில்லை.  இதனால், இயந்திரம் பழுதாகி இருக்கலாம் என கருதிய அவர், தனது ஏடிஎம் அட்டையை திரும்ப எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். 
    இந்நிலையில்,  சிறிது நேரம் கழித்து அவருக்கு வங்கியில் இருந்து வந்த குறுந்தகவலில் அவரது கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில்,  குருகிராமைச் சேர்ந்த முகம்மது ஜாஃபர்,  ஷகீல் கான் ஆகியோரை  கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது,  இருவரும் ஏடிஎம் மையங்களில்  நூதன முறையில் பொதுமக்களின் பணத்தை திருடியிருப்பது தெரிய வந்தது.  அவர்களிடமிருந்து ரூ.66 ஆயிரம் ரொக்கம்,  17 ஏடிஎம் அட்டைகள்,  கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகக போலீஸார் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai