Enable Javscript for better performance
கார் மோதி ஆட்டோ ஓட்டுநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு தில்லியில் ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
    இதுகுறித்து தில்லி தென்கிழக்கு காவல் துறை துணை ஆணையர் சின்மயி பிஸ்வால் கூறியதாவது: பிகார் மாநிலம்,  கட்டிஹார் மாவட்டம்,  பஹர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது மிஸ்தர்.  தெற்கு தில்லி,  கிர்க்கி எக்ஸ்டென்ஸன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த அவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இந்நிலையில்,  சம்பவத்தன்று இரவு கைலாஷ் காலனி மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது,  அவ்வழியாக சென்ற கார், ஆட்டோ மீது மோதிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டது.
    தகவலறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது,   பலத்த காயமடைந்த நிலையில்  இருந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது மிஸ்தரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால்,  சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார்.  அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    இதனிடையே,  ஆட்டோ மீது பின்புறமாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரின் பதிவெண்கள் தொடர்புடைய விவரங்கள் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் பெறப்பட்டது. விசாரணையில் அந்தக் கார் அருண் சர்மா என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது.  மேலும், காரை அவரது மகன் ஓட்டியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கார் ஓட்டுநரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை  அதிகாரி சின்மயி பிஸ்வால் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai