Enable Javscript for better performance
திகார் சிறையில் கைதி சாவு: நீதி விசாரணைக்கு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி  உயிரிழந்தது தொடர்பாக நீதித் துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: தில்லியைச் சேர்ந்தவர் அமித் தாகர் (32).  அவர் இருவரைக் கொலை செய்த வழக்கில் திகார் சிறை  எண் 4-இல் உள்ள அறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.  அவர் ஏற்கெனவே உடல் பருமன் என்பதால் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு  விசாரணை நடைபெற்று வருகிறது என போலீஸார் தெரிவித்தனர்.
    இதனிடையே, அமித் தாகர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து மேற்கு மாவட்டக் காவல்  துறை துணை ஆணையர் விஜய் குமார் கூறுகையில், "மாரடைப்பால் கைதி இறந்திருக்கலாம் என தோன்றுகிறது' என்றார். திகார் சிறை கூடுதல் ஐஜி ராஜ் குமார் கூறுகையில், "தாகர் மரணம் குறித்து நீதித் துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இப்போது விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai