Enable Javscript for better performance
தொடரும் தொல்லைகள்: குரங்கு பிடிப்பவர்களைத் தேடுகிறது எஸ்டிஎம்சி!- Dinamani

சுடச்சுட

    

    தொடரும் தொல்லைகள்: குரங்கு பிடிப்பவர்களைத் தேடுகிறது எஸ்டிஎம்சி!

    By DIN  |   Published on : 02nd January 2018 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு தில்லியில்  குரங்குகளால் தொடர்ந்து அதிகரித்து வரும் தொல்லையைக் கட்டுப்படுத்த வேறு மாநிலங்களில் இருந்து குரங்கு பிடிப்பவர்களை அழைத்து வர தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட  லாஜ்பாத் நகர், வசந்த் குஞ்ச், அசோலா, துக்ளாபாத் ஆகிய பகுதிகளில் குரங்குகளின் தொல்லை மிக அதிகமாகக் காணப்படுகிறது. 
    தெற்கு தில்லி மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள சிவிக் சென்டரில் வேலை பார்த்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் அண்மையில் குரங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகினர். மேலும்,  மாநகராட்சிக்குள்பட்ட  நீதி மன்ற வளாகங்களிலும் குரங்குகளின் தொல்லை மிக அதிகமாக உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
    இதைத் தொடர்ந்து, குரங்குகளைப் பிடிக்கும் பணியை விரைவுபடுத்த மாநகராட்சி திட்டமிட்டது. இது தொடர்பாக தில்லி நாளிதழ்களில் மாநகராட்சியின் சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டது.  குரங்கொன்றைப் பிடிப்பதற்கு சன்மானமாக ரூ.1,200 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. பிறகு அந்தத் தொகை ரூ.2,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  ஆனால், 2017 ஆம் ஆண்டில் வெறும் 50 குரங்குகள் மட்டுமே  பிடிக்கப்பட்டுள்ளன.
    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "தில்லியில் முறையாக பயிற்சி பெற்ற குரங்கு பிடிப்பவர்கள் இல்லை. 2017- ஆம் ஆண்டில் வெறும் 50 குரங்குகள்  மட்டுமே பிடிக்கப்பட்டுள்ளன. இதனால், முறையான பயிற்சி பெற்ற குரங்கு பிடிப்பவர்களைத் தேடி ஹரியாணா, பஞ்சாப், கர்நாடகம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய உள்ளோம்' என்றனர்.
    இந்நிலையில், இந்த விவகாரத்தில் வனத் துறை மீது தெற்கு தில்லி மாநகராட்சியின் அவைத் தலைவர் ஷிக்கா ராய் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், "வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி வன விலங்கான குரங்கை பாதுகாப்பாகப் பிடிக்க வேண்டியது வனத் துறையினரின் கடமையாகும். குரங்கு பிடிப்பது மாநகராட்சியின் வேலை அல்ல' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai