Enable Javscript for better performance
நியாய விலைக் கடைகளில் மின்னணு முறையில் பொருள்கள் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    நியாய விலைக் கடைகளில் மின்னணு முறையில் பொருள்கள் விநியோகம்

    By DIN  |   Published on : 02nd January 2018 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் நியாய விலைக் கடைகளில்  மின்னணு கருவிகள் மூலம் ("இ-பாயின்ட் சேல்')  சோதனை அடிப்படையில் உணவுப் பொருள்கள் விநியோகத்தை தில்லி அரசு தொடங்கியுள்ளது.
    இது குறித்து தில்லி உணவு, வழங்கல் துறை அமைச்சர் இம்ரான் ஹுசைன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி,  பொது விநியோக முறையின் கீழ் மாதந்தோறும் 72.78 லட்சம் பயனாளிகளுக்கு  சுமார் 3.75 லட்சம் குவிண்டால் உணவுப் பொருள்களை 2,254 நியாய விலைக் கடைகள் மூலம் தில்லி அரசு வழங்கி வருகிறது.  
    தில்லியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பயனாளிகளுக்கு உணவுப் பொருள்கள் மின்னணு முறையில் விநியோகம்  சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. 
    இதற்காக  மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டுடன் தில்லி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 
    இ-பாயின்ட் சேல்  வாயிலாக பயனாளிகளை ஆதார் எண் கொண்டு சரி பார்ப்பதுடன், பண பரிவர்த்தனையையும் கண்காணிக்க முடியும். 
    மேலும், பயனாளிகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் எடையையும் சரிபார்க்க முடியும். இதன்படி தில்லியில் உள்ள எந்தவொரு நியாயவிலைக் கடையிலும் அட்டைதாரர் உணவுப் பொருள்களை பெற முடியும். இந்த  சோதனை அடிப்படையிலான இந்த முறை, பிப்ரவரி மாதம் முதல் முழுமையாக விரிவாக்கம் செய்யப்படும்.
    நியாய விலைக் கடை உரிமையளர்களுக்கு வழங்கப்படும் விளிம்புத் தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. 
    இந்நிலையில், விளிம்புத் தொகையை  உயர்த்தவும் தில்லி அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது குவிண்டாலுக்கு ரூ. 70 வழங்கப்பட்டு வரும் தொகையை ரூ. 200 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் இம்ரான் ஹுசைன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai