Enable Javscript for better performance
போதைப் பொருள் விநியோகம்: கைது செய்யப்பட்ட மாணவர்கள்குறித்து கல்லூரி விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    போதைப் பொருள் விநியோகம்: கைது செய்யப்பட்ட மாணவர்கள் குறித்து கல்லூரி விளக்கம்

    By DIN  |   Published on : 02nd January 2018 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "போதைப் பொருள் விநியோகித்ததாக கைது செய்யப்பட்ட இரண்டு கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இல்லை; அவர்கள் முன்னாள் மாணவர்கள்' என்று ஹிந்து கல்லூரி விளக்கம் அளித்துள்ளது.
    புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது போதைப் பொருள்களைத் தடுக்க மேற்கொண்ட தீவிர விசாரணையில், மூன்று முன்னணி பல்கலைக்கழகங்களில் படித்து வரும் அனிரூத் மாத்தூர் (22), டென்சின் புன்சாக் (23), சாம் மலிக் (21), கௌரவ் குமார் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்தது.
    இதில், டென்சின் புன்சாக், கௌரவ் குமார் ஆகிய இருவர் ஹிந்து கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்றும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், அமிட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலா ஒரு மாணவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    இந்நிலையில், ஹிந்து கல்லூரி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
    டென்சின் புன்சாக் என்ற மாணவர் 2012-ம் ஆண்டு பிஎஸ்சி (ஹானஸ்) வேதியியல் பரிவில் சேர்ந்து 2015-ம் முடித்தார். பின்னர் 2015-ம் ஆண்டில் எம்எஸ்சி வேதியியலில் சேர்ந்து 2017-ம் ஆண்டு முடித்து கல்லுரியை விட்டு சென்றுவிட்டார்.
    அதேபோல், கௌரவ் குமார்2013-ம் ஆண்டு பிஏ(ஹானஸ்) பொருளாதாரத்தில் சேர்ந்து தேர்வில் தோல்வி அடைந்து பின்பு 2014-இல் மீண்டும் சேர்ந்து 2017-ம் ஆண்டு ஏப்ரல் -மே மாதம் இறுதி தேர்வை எழுதிவிட்டார். ஆகையால், டென்சின் புன்சாக், கௌரவ் குமார் ஆகிய இருவரும் ஹிந்து கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களாவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai