Enable Javscript for better performance
விதிகளை மீறும் உணவகங்கள் மீதுநடவடிக்கை தேவை: விஜேந்தர் குப்தா- Dinamani

சுடச்சுட

    

    விதிகளை மீறும் உணவகங்கள் மீது நடவடிக்கை தேவை: விஜேந்தர் குப்தா

    By DIN  |   Published on : 02nd January 2018 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விதிகளை மீறும் உணவகங்கள்,கேளிக்கை விடுதிகள் (பப்) மீது தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
    கிரேட்டர் கைலாஷில் உள்ள கேளிக்கை விடுதியில் சனிக்கிழமை துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.  அரசின் வருவாயைக் கருதி தலைநகரில் கேளிக்கை விடுதிகளுக்கும்,  பார்களுக்கும் உரிமம் வழங்கப்படுகிறது. இதனால், இளம் தலைமுறையினர் குடிப்பழக்கத்துக்கு  தள்ளப்படுகின்றனர்.   அதிகாலை 4 மணிக்கே இதுபோன்ற கேளிக்கை விடுதிகள் திறக்கப்பட்டு, நள்ளிரவை தாண்டியும் விதியை மீறி செயல்பட்டு வருகின்றன. இதையெல்லாம்  தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. திறந்த வெளியில் மது அருந்துவோருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்தார். இது தொடர்பாக ஆங்காங்கே விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது.  திறந்தவெளியில் மது அருந்துவதால் தில்லியில்  சட்டம்-ஒழங்கு மோசமடைந்து வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவுக்குப் பிறகு மூடப்பட்ட 50 உணவகங்களை மீண்டும் திறப்பதற்கு உரிமம் வழங்க தில்லி அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக உணவகங்களின் உரிமையாளர்களும், தில்லி அரசும் கூட்டுச் சேர்ந்துள்ளனர்.  சிறிய சாதனைகளை  பல கோடி ரூபாய் செலவில் விளம்பரங்களை வெளியிட்டு வரும் தில்லி அரசு,  மதுவுக்கு எதிரான காந்தியின் கொள்கையை மறந்துவிட்டது.  மது அருந்துவதை ஊக்குவிப்பதாக தில்லி அரசின் நடவடிக்கைகள் உள்ளன. எனவே, விதிகளை மீறிச் செயல்படும் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் மீது  தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் விஜேந்தர் குப்தா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai