Enable Javscript for better performance
வேன் ஓட்டுநரை மிரட்டி கொள்ளை:   2 பேர் கைது; 2,975 ஜீன்ஸ் ஆடைகள் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    வேன் ஓட்டுநரை மிரட்டி கொள்ளை:   2 பேர் கைது; 2,975 ஜீன்ஸ் ஆடைகள் மீட்பு

    By DIN  |   Published on : 02nd January 2018 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேன் ஓட்டுநரை மிரட்டி கொள்ளையில் ஈடுபட்ட  2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2,975 ஜீன்ஸ் ஆடைகள் மீட்கப்பட்டதாக தில்லி போலீஸார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து தென்கிழக்கு மாவட்ட காவல் சரக துணை ஆணையர் சின்மய் பிஸ்வால் திங்கள்கிழமை கூறியதாவது: 
    ரோஹிணி செக்டார் 11-இல் மெட்ரோ நடைபாதை அருகே டிசம்பர் 21-ஆம் தேதி வேனில் ஜீன்ஸ் ஆடைகளை ஏற்றிச் சென்ற வேன் ஓட்டுநரை சிலர் வழிமறித்து மிரட்டினர்.  பின்னர், அவரிடமிருந்த செல்லிடப்பேசியைப் பறித்தனர். 
    தொடர்ந்து,  அவரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விட்டுவிட்டு 3,400 ஜீன்ஸ் ஆடைகளுடன் அந்த வேனை கடத்திச் சென்றனர்.  இது தொடர்பாக பிரசாந்த் விஹார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
    இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஜீன்ஸ் ஆடைகளை மொத்தமாக வாங்கி அனுப்பப்படும் ரகுபீர் நகர் பகுதியில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.இதனிடையே,  கடத்தப்பட்ட வேன் நாங்லோய் பகுதியில் நிறுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து,   ரகுபீர் நகர் பகுதியைச் சேர்ந்த பர்வேஜ் (26),  அஃப்ஜல் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2,975 ஜீன்ஸ் ஆடைகள் மீட்கப்பட்டன.  வழிப்பறி செய்யப்பட்ட செல்லிடப்பேசியும் மீட்கப்பட்டது. தொழிலில் நஷ்டமடைந்ததால் பர்வேஜ்,  தனது கூட்டாளியான அஃப்ஜலுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்ததாக சின்மய் பிஸ்வால் கூறினார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai