6 மாதங்களுக்கு முன் தப்பிய கைதி கைது
By DIN | Published on : 02nd January 2018 12:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
காவல் துறையினரிடம் இருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தப்பிய, சோனு என்ற கைதியை போலீஸார் துப்பாக்சி சூடு நடத்தி மீண்டும் கைது செய்தனர்.
இதுகுறித்து நொய்டா போலீஸார் கூறியதாவது: நொய்டா போலீஸாரிடம் இருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தப்பிய கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்ட சோனுவை போலீஸார் தேடி வந்தனர்.
சோனு குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 15 ஆயிரம் வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, நொய்டா போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி சோனுவை கைது செய்தனர்.
இதேபோல் நொய்டா செக்டார் -58 போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளும், 2 மோட்டார்சைக்கிள்களும், செல்லிடப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீஸார் தெரிவித்தனர்.