Enable Javscript for better performance
இரண்டாவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல்!- Dinamani

சுடச்சுட

    

    தில்லி லாஜ்பாத் நகர் மேம்பாலத்தில் மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டாவது நாளாக செவ்வாய்கிழமையும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:  லாஜ்பாத் நகர் மேம்பாலப் பணிகள் வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறும். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 
    இதைத் தொடர்ந்து,  நொய்டாவில் இருந்து வரும் வாகனங்கள் பாரபுல்லா மேம்பாலத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.   டி.என்.டி.  மற்றும் லாஜ்பாத் நகர் இடையே தினம்தோறும் சுமார் 3 லட்சம் வாகனங்கள் செல்கின்றன.  ஆஷ்ரம் - லாஜ்பாத் நகர்,  லாஜ்பாத் நகர் - ஆஷ்ரமம் செல்லும் கனரக வாகனங்கள் லாஜ்பாத் நகர் மேம்பாலத்துக்கு கீழாக திருப்பிவிடப்படவுள்ளன என்றனர்.
    இது குறித்து தெற்கு தில்லி காவல் துறை துணை ஆணையர் விஜய் சிங் கூறியதாவது: போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக  போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவுரைகளை வாகன ஓட்டிகள் பின்பற்றி நடக்க வேண்டும்.  அப்போதுதான் சிரமங்களைத் தவிர்க்க முடியும். சராய் கலே கான்- பாரபுல்லா இடையேயும் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேம்பாலப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும்  கிரேன், புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களால் சில நேரங்களில் சாலைகளில் போக்குவரத்து தடைச் செய்யப்படலாம் என்றார் அவர்.
    புத்தாண்டு தினமான திங்கள்கிழமை மக்கள் அதிகளவில் குவிந்ததால் தில்லியின் ஐ.டி.ஓ., இந்தியா கேட்டை சுற்றியுள்ள சாலை, அக்பர் சாலை, அசோகா சாலை, ரஃபி மார்க், மதுரா சாலை, லாஜ்பாத் நகர் மேம்பாலம் உள்ளிட்ட பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனால், மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  புத்தாண்டு நாளில் தொடங்கிய போக்குவரத்து நெரிசல் செவ்வாய்கிழமையும் தொடர்ந்தது. வாகன நெரிசல் நிலவரம் தொடர்பாக  தில்லி போக்குவரத்துப் போலீஸின் அலுவலகபூர்வ சுட்டுரைப் பக்கத்தில், வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ச்சியாக அறிவுரைகள் இடம் பெற்று வருகின்றன. இதை மக்கள் பார்த்து பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று போக்குவரத்துப் போலீஸார் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai