Enable Javscript for better performance
சர்க்கரை மானியத்தை உயர்த்த வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    சர்க்கரை மானியத்தை உயர்த்த வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 03rd January 2018 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரைக்கான மானியத்தை கிலோவுக்கு ரூ.28.50 ஆக உயர்த்தி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தியது.
    இது தொடர்பாக மாநிலங்களவையில் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்கு கொண்டு வரும் பூஜ்ய நேரத்தில் அதிமுக உறுப்பினர் எஸ். முத்துக்கருப்பன் முன்வைத்த கோரிக்கை: 
    தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் முன்னுரிமை குடும்ப அட்டைதாரருக்கு மாதம் 2 கிலோவும்,  "சர்க்கரை' குடும்ப அட்டைதாரருக்கு மாதம் 5 கிலோவும் சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் சர்க்கரையின் மாதாந்திர தேவையானது 33,636 டன்னாக உயர்ந்துள்ளது. ஆனால்,  வரியில்லா சர்க்கரை (லெவி சர்க்கரை) ஒதுக்கீட்டை  மத்திய அரசு 2013, ஜூன் முதல் வாபஸ் பெற்றுவிட்டது.
    கிலோவுக்கு ரூ.18.50 வீதம் மட்டுமே மாதத்திற்கு 10, 820 டன்னுக்கு மத்திய அரசு மானியம் தருகிறது. அதேவேளையில்,  வெளிச்சந்தையில் சர்க்கரையின் விலை ரூ.45 வரை உயர்ந்துள்ளது.  இதனால்,  மத்திய அரசால் மானிய விலைக்கு வழங்கப்படும்  சர்க்கரை, கூடுதலாக வழங்கப்படும் சர்க்கரை ஆகியவற்றின் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில்,  2017 , ஜூன் 1 முதல் சர்க்கரைக்கு வழங்கப்படும் மானியத்தையும் மத்திய அரசு விலக்கிக் கொண்டுவிட்டது. 
    மாதம் 1,864 டன் சர்க்கரை மட்டுமே மானியமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இதனால்,  குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் 33,636 டன் சர்க்கரைக்கு கூடுதல் செலவாக  தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.1,300 கோடி அளவுக்கு சுமை ஏற்பட்டுள்ளது. எனவே,  தமிழகத்துக்கு சர்க்கரைக்கு மத்திய  அரசு அளித்து வரும் மானியத்தை கிலோவுக்கு ரூ.28.50ஆக உயர்த்த வேண்டும். மேலும்,  மாதம்தோறும் வழங்கப்படும் வரியில்லா சர்க்கரை அளவை மீண்டும் 33,636 டன்னாக உயர்த்தி வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai