Enable Javscript for better performance
தில்லி உயிரியல் பூங்கா சாதனை- Dinamani

சுடச்சுட

    

    இந்தப் புத்தாண்டு தினத்தன்று தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவுக்கு 34,500 பேர் வருகை தந்து சாதனை அளவு பதிவாகியுள்ளது.
    இது குறித்து அதன் அதிகாரிகள் கூறியதாவது: புத்தாண்டு தினத்தன்று தில்லி தேசிய உயிரியல் பூங்காவுக்கு 34,500 பேர் வருகை தந்துள்ளனர். இது புதிய சாதனை அளவாகும். இதற்கு முன்பு 2017-இல் ஈத் பண்டிகையின் போது 32,000 பேர் வருகை தந்ததே சாதனை அளவாக இதுவரை இருந்து வந்தது. கடும் குளிர், அடர் பனிமூட்டம், காண்புதிறன் குறைவு ஆகிய இடர்பாடுகள் இருந்த போதிலும் புத்தாண்டு தினத்தன்று பெருமளவில் மக்கள் வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai