Enable Javscript for better performance
பஹார்கஞ் பகுதி ஹோட்டல்  உரிமையாளர்கள் போராட்ட எச்சரிக்கை: வடக்கு தில்லி மாநகராட்சி நோட்டீஸ் எதிரொலி- Dinamani

சுடச்சுட

    

    பஹார்கஞ் பகுதி ஹோட்டல்  உரிமையாளர்கள் போராட்ட எச்சரிக்கை: வடக்கு தில்லி மாநகராட்சி நோட்டீஸ் எதிரொலி

    By DIN  |   Published on : 03rd January 2018 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுகாதார விதி மீறல், இட ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களுக்காக மொத்தமாக நோட்டீஸ் அனுப்பும் வடக்கு தில்லி மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக பஹார்கஞ் பகுதி ஹோட்டல் உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
    இதுதொடர்பாக தில்லி ஹோட்டல் மஹாசங்கத்தின் பொதுச் செயலர் அருன் குப்தா செவ்வாய்க்கிழமை கூறுகையில், "சுகாதார சீர்கேடு, சுத்தமின்மை, இட ஆக்கிரமிப்பு, மாநகராட்சி சுகாதார விதிகளை மீறியது போன்ற காரணங்களுக்காக பஹார்கஞ் பகுதியில் உள்ள 150-க்கும் மேற்பட்ட சிறிய ஹோட்டல், தங்கும் விடுதிகள் ஆகியவற்றுக்கு கடந்த மாதம் 31-ம் தேதி வடக்கு தில்லி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
    இந்த நோட்டீஸுக்கு 24 மணி நேரத்தில் பதிலளிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. எந்தவித ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சிகளின் விதிமுறைகளை ஏற்று நாங்கள் நடந்து கொள்கிறோம். விதிமுறைகளுக்கு புறம்பாக ஏதாவது இருந்தால் அதை அகற்றவோ, நிவர்த்தி செய்யவோ தயாராக இருக்கிறோம்.
    ஆனால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உரிமையாளர்களின் முன்னிலையில் ஆய்வு நடத்தாமல் மொத்தமாக நோட்டீஸ்கள் அனுப்புவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த நடவடிக்கை தொடர்ந்தால் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai