Enable Javscript for better performance
மதிய உணவுத் திட்டத்தில் "பால்': மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மதிய உணவுத் திட்டத்தில் "பால்': மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 03rd January 2018 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயிகளின் வருமானத்தை 2020ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க உயர்த்தும் இலக்குடன், மதிய உணவுத் திட்டம் போன்ற திட்டங்களில் பாலை சேர்க்கும்படி, அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
    இதுகுறித்து மத்திய வேளாண்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
    விவசாயிகளின் வருமானத்தை வரும் 2020ஆம் ஆண்டுக்குள் 2 மடங்காக உயர்த்தும் இலக்குடன், 255 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 
    இதைக் கவனத்தில் கொண்டு, உலக பால் வணிகத்தில் 2 சதவீத பங்களிப்பை அளிக்கும்படி இந்திய பால் கூட்டுறவு சங்கங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 
    தேசிய பால் மேம்பாட்டு அமைப்பிடமும், இந்த இலக்கை அடையும் வகையில் செயல் திட்டத்தை தயாரிக்கும்படியும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 
    விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலில் தற்போது கூட்டுறவு சங்கங்கள் 10 சதவீதத்தை அரசுடன் பகிர்ந்து கொள்கின்றன. இதை 20 சதவீதமாக அதிகரிக்கும்படி பால் கூட்டுறவு சங்கங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 
    அதேபோல், மதிய உணவுத் திட்டம் போன்ற திட்டங்களில் பாலை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 
    இப்படி செய்வதன் மூலம், பால் நுகர்வை அதிகரிக்க முடியும்; விவசாயிகளுக்கு 2 மடங்கு வருமானம் கிடைப்பதையும் உறுதி செய்ய முடியும் என்று அரசு கருதுகிறது.
    தில்லியில் அண்மையில் நடைபெற்ற உயர் நிலைக் கூட்டத்தில், முக்கிய பால் கூட்டுறவு சங்கங்களான குஜராத்தைச் சேர்ந்த அமுல், கர்நாடகத்தைச் சேர்ந்த நந்தினி, பிகாரைச் சேர்ந்த சுதா, ஹரியாணாவைச் சேர்ந்த விடா, பஞ்சாபைச் சேர்ந்த வெர்கா, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பராக் ஆகிய நிறுவனங்களுக்கு, விவசாயிகளிடம் இருந்து பாரபட்சமின்றி பாலை கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது என்று அந்த அறிவிப்பில் மத்திய வேளாண்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai