Enable Javscript for better performance
60 விமானங்கள் 64 ரயில்கள் தாமதம்!- Dinamani

சுடச்சுட

    

    தொடர்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை நிலவிய அடர் பனிமூட்டம் காரணமாக  தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்தன.   இதேபோன்று ரயில் சேவையிலும் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பு ஏற்பட்டது.
    தில்லி, தேசியத் தலைநகர் வலையம், தில்லியை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்கள் ஆகியவற்றில்  கடந்த சனிக்கிழமை முதல் அடர் பனிமூட்டம் காணப்பட்டு வருகிறது. அதிகாலை வேளையில் காண்புதிறன் வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. இதனால், கடந்த இரண்டு நாள்களாக விமானங்கள், ரயில்கள் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தில்லியில் அடர் பனிமூட்டம் நிலவியது. 
    இதைத் தொடர்ந்து 64 ரயில்கள் தாமதமாக வந்து கொண்டிருந்ததாக வடக்கு ரயில்வே தெரிவித்து. மேலும், 24 ரயில்களின் நேர அட்டவணை மாற்றியமைக்கப்பட்டது.  21 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
    இதேபோன்று தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு 60-க்கும் மேற்பட்ட   விமானங்கள் கால தாமதமாக தரையிரங்கின. இதில் 40 உள்நாட்டு சேவை அளிக்கும் விமானங்கள், 26 சர்வதேச சேவை அளிக்கும் விமானங்கள் ஆகும். காண்புதிறன் வெகுவாகக் குறைந்ததால்  6 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. 
    இதேபோன்று திங்கள்கிழமையும் காண்புதிறன் குறைந்ததன் காரணமாக தில்லி விமான நிலையத்தில் 300 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    தில்லி சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 டிகிரி உயர்ந்து 8.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காலை 8.30 மணி நிலவரப்படி காற்றில் ஈரப்பதத்தின் அளவு 97 சதவீதமாக பதிவாகியிருந்தது.
    இதற்கிடையே, தில்லி காற்று மாசு செவ்வாய்க்கிழமையும் அபாயகர கட்டத்திலேயே இருந்து வந்தது. இதே நிலைதான் அடுத்த இரண்டு நாள்களுக்கும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  புதன்கிழமை கடும் பனிமூட்டம் இருக்கும் என்றும்  அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai