Enable Javscript for better performance
ஆசியான் மாநாடு நடைபெறவுள்ள  பகுதிகளில் மேயர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆசியான் மாநாடு நடைபெறவுள்ள இடங்களை மேயர் நீமா பகத் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
    மாநகராட்சி நிலைக் குழுத் தலைவர் பிரவீஷ் சர்மா, அவைத் தலைவர் சந்தோஷ் பால், ஆணையர் ரன்பீர் சிங், கூடுதல் ஆணையர் ஆர்.எஸ்.மீனா, தலைமை இயக்குநர் கே.பி.சிங், துணை ஆணையர்கள் அதீப் அகமது, அல்கா ஷர்மா உள்ளிட்ட பலர் இந்த ஆய்வின் போது உடன் சென்றனர்.
    அக்ஷர்தாம் - நிஜாமுதீன் சாலையை ஆய்வு செய்த மேயர், அக்ஷர்தாமிற்கு ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு விருந்தினர்கள் வருகை தரவுள்ளதால், அதைச் சுற்றியுள்ள இடங்களைத் தூய்மையாகப் பேணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அக்ஷர்தாமில் வெளி வாயில்களை அலங்கரிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
    ஆசியான் மாநாடு நடைபெறும் நாள்களில் கிழக்கு தில்லி பகுதியில் காற்று மாசுவை ஏற்படுத்தக் கூடிய தொழிற்சாலைகள் மீது தீவிரக் கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    இந்த ஆய்வு குறித்து மேயர் நீமா பகத் கூறுகையில், "தில்லியில் இந்த மாதம் 19 முதல் 30-ஆம் தேதி வரையில் ஆசியான் மாநாடு நடைபெறவுள்ளது. 
    அப்போது, வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்கும் 
    வகையில் கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளை தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai