Enable Javscript for better performance
ஆம் ஆத்மி மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு: எதிர்க்கட்சிகள் கருத்து- Dinamani

சுடச்சுட

    

    ஆம் ஆத்மி மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு: எதிர்க்கட்சிகள் கருத்து

    By DIN  |   Published on : 04th January 2018 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களாக சஞ்சய் சிங் (46) ,  நாராயண் தாஸ் குப்தா (72), சுஷீல் குப்தா (56)  ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக, காங்கிரஸ், ஸ்வராஜ் இந்தியா ஆகிய கட்சிகள் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை சாடியுள்ளனர்.
     தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா கூறுகையில், "பாமரர்களின் பிரதிநிதித்துவம் எனக் கூறி தொடங்கிய கட்சி,   நாராயண் தாஸ் குப்தா, சுஷீல் குப்தா போன்ற வணிகர்களுக்கு மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட  ஆம் ஆத்மி கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. இதன் மூலம் அக்கட்சி  பணக்காரர்களின் கட்சியாக உருவெடுத்துள்ளது' என்றார்.
    காங்கிரஸ் கட்சியின் தில்லி  தலைவர் அஜய் மாக்கன் தனது சுட்டுரை பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: கேஜரிவால் அவர்களே, அரசியலில் மாற்றம் கொண்டுவரவே அரசியலுக்கு வந்தீர்கள். காங்கிரஸிலிருந்து ஒருவரையும்,  பாஜகவிலிருந்து மற்றொருவரையும் பிடித்து வந்துள்ளீர்கள்.  ஜிஎஸ்டி நிபுணர் எனக் கூறப்படும் என்.டி. குப்தா,  மோடியின் ஜிஎஸ்டியின் மிகப் பெரிய ஆதரவாளராவார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கடந்த நவம்பர் 28-ஆம் தேதி சுஷீல் குப்தா கடிதம் அளித்தார். அப்போது அவரிடம் ஏன் எனக் கேட்ட போது, அவருக்கு மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். வாய்ப்பில்லை எனத் தெரிவித்ததற்கு,  அய்யா உங்களுக்கு தெரியாது என்று கூறி   சுஷீல் குப்தா புன்னகைத்தார் என்று தெரிவித்துள்ளார்.
     ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தேசியத் தலைவர் யோகேந்திர யாதவ் தனது சுட்டுரையில், "கேஜரிவால் மீது கபில் மிஸ்ரா குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது, கேஜரிவாலை யாரும் விலைக்கு வாங்க முடியாது எனக் கூறி வந்தேன். தற்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பேச்சற்று, வெட்கித் தலைகுனிந்து, ஊமையாக இருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai