Enable Javscript for better performance
குஜராத் மாடலைப் பின்பற்ற என்டிஎம்சி முடிவு!- Dinamani

சுடச்சுட

    

    வடக்கு தில்லி மாநகாராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள  பூங்காக்களைப் பராமரிப்பதில் குஜராத் மாடலைப் பின்பற்றுவது தொடர்பாக ஆராயவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.  இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: 
    குஜராத்தில் பூங்காக்களின் ஒரு பகுதியை உணவகங்கள் மற்றும் சிறிய கடைகளுக்கு வாடகைக்கு வழங்குவதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து பூங்காக்கள் பராமரிக்கப்படுகின்றன. அதே குஜராத் மாடலை வடக்கு தில்லி மாநகராட்சியில்  பின்பற்ற முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இத் திட்டம் வெற்றி பெற்றால் வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பல பூங்காக்கள் மேம்படும் என்றார்கள். 
    இது தொடர்பாக மேயர் ப்ரீத்தி அகர்வால் கூறுகையில்,  "பூங்காவின் ஒரு பகுதியை கடைகளுக்கு வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தில் பூங்காக்களைப் பராமரிக்க முடியுமா என்பது தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மாநகராட்சி ஆணையர் மதூப் வியாஷைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
    மாநகராட்சி எதிர்கொள்ளும் நிதிப் பற்றாக்குறைகளை இதுபோன்ற திட்டங்கள் மூலம்  எதிர்கொள்ளவுள்ளோம்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai