Enable Javscript for better performance
ஜிப்மர் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஜிப்மர் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 04th January 2018 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுசேரியில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் தினக் கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி. கே. ரங்கராஜன் தலைமையில் ஜிப்மர் பாதுகாப்புக் குழுவினர் புதன்கிழமை சந்தித்தனர். 
    இச்சந்திப்பு குறித்து டி. கே. ரங்கராஜன் கூறியதாவது: ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வரும் தினக்கூலி ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு தொடர்பாக, சென்னையில் உள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வழக்குத் தொடுக்கப்பட்டது.
    வழக்கை விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், ஜிப்மர் மருத்துவமனையில் தினக் கூலிகளாக 2012, மார்ச் 5-ஆம் தேதி முதல் பணிபுரிபவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், உரிய ஊதிய நிலுவைத் தொகை, போனஸ் உள்ளிட்டவற்றை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இதை எதிர்த்து ஜிப்மர் நிர்வாகம் மேல்முறையீடு செய்ய முயன்று வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தோம் என்றார் அவர்.அப்போது, ஜிப்மர் பாதுகாப்புக் குழுவின் தலைவர் தா. முருகன், பொருளாளர் கலைமதி, ஜிப்மர் மருத்துவமனை தினக்கூலி ஊழியர் சங்கத் தலைவர் சிவசங்கரன், நிர்வாகிகள் டேனியல், செல்லத்துரை ஆகியோர்உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai