Enable Javscript for better performance
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர முடியாததற்கு தில்லி அரசே பொறுப்பு: பாஜக- Dinamani

சுடச்சுட

    

    தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர முடியாததற்கு தில்லி அரசே பொறுப்பு: பாஜக

    By DIN  |   Published on : 04th January 2018 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகர் தில்லியில்  தனியார் பள்ளிகளில்  ஏழை மாணவர்கள் சேர முடியாததற்கு தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என சட்டப்பேரவை பாஜக  உறுப்பினரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.
    இது குறித்து அவர் புதன்கிழமை கூறியதாவது: தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்படும் சேர்க்கை இடங்கள் தொடர்பாக தில்லி அரசு உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில்,  2015-16 கல்வியாண்டில் 31 ஆயிரம் மாணவர்கள், 2016-17-இல் 19 ஆயிரம் மாணவர்கள், 2017-18 கல்வியாண்டில் 20 ஆயிரம் மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. 
    இதன் மூலம் 40 ஆயிரம் ஏழை, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.  ஆண்டுதோறும் இந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு தில்லி அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டும். மேலும், இதுகுறித்து தில்லி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.  
    அடுத்த கல்வியாண்டுக்கான பொதுப் பிரிவுக்கான நர்சரி சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்நிலையில்,  பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மாணவர்கள் குறித்த சேர்க்கை கொள்கையை தில்லி அரசு வெளியிடவில்லை. அடுத்த கல்வியாண்டு முதல் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுவதை தில்லி அரசு உறுதிப்படுத்த வேண்டும்  என்றார் விஜேந்தர் குப்தா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai