Enable Javscript for better performance
தில்லியில் பழைமையான மேம்பாலங்களை சீரமைக்கத் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் பழைமையான மேம்பாலங்களை சீரமைக்கத் திட்டம்

    By DIN  |   Published on : 04th January 2018 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகர் தில்லியில் உள்ள பழைமையான  மேம்பாலங்கள் மிக விரைவில் சீரமைக்க பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.
    இது குறித்து தில்லி பொதுப் பணித்துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: 
    தில்லி லாஜ்பாத் நகர் மேம்பாலத்தில் விரிசல்கள் காணப்பட்டதால் அங்கு சீரமைப்புப் பணிகள் அண்மையில் தொடங்கியது. இப்பணிகள் வரும் 14- ஆம் தேதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,  25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேம்பாலங்களில் பெரும்பாலானவை  பழுதடைந்து விட்டன. இவை பொதுப்பணித் துறையால் மிக விரைவில் சீரமைக்கப்படவுள்ளன. இது தொடர்பாக மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (இநஐத) மற்றும் மத்திய கட்டட ஆராய்சி நிறுவனம் ஆகியவற்றிடம் ஆலோசனைகள் பெறப்படவுள்ளன.
    தில்லி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 86 மேம்பாலங்கள் உள்ளன. இவற்றில், 11 மேம்பாலங்கள் 1980 - 1990 ஆண்டிலும்  , 13 மேம்பாலங்கள் 2001-2002 ஆண்டிலும் கட்டப்பட்டன.  இந்த மேம்பாலங்கள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றில் மிகப் பழைமையான, விரிசலடைந்த மேம்பாலங்கள் கண்டறியப்பட்டு சீரமைக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தங்கள் விரைவில் கோரப்படும்.
    இந்த மேம்பாலங்களில் சீரமைப்புப்  பணிகளை மேற்கொள்ள போக்குவரத்துக் காவல் துறையின் அனுமதி தேவை. ஆனால், அந்த அனுமதியைப் பெறுவதில் பல தடங்கல் உள்ளன. சாதரா மேம்பாலம் சீரமைப்புப் பணிகள் ஆறு மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட காலத்துக்கு தில்லி காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது. இப்போது 40 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் போக்குவரத்து போலீஸாரின் மீண்டும் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஆனால், இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால், பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்து போலீஸாருடன் கடந்த இரு மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.  ஆனால், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai